அட.. நம்ம லதா பாண்டியா இது..? 10 வருஷம் கழிச்சும் அப்படியே இருக்காங்களேப்பா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 9, 2023

Spread the love

சிறுவயதிலிருந்தே நடிக்க தொடங்கி தமிழ் மற்றும் தெலுங்கு திரை துறையில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த ஸ்ரீதிவ்யா பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரம்யாவின் சகோதரி ஆவார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஹனுமான் ஜங்ஷன் என்ற திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யா குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

மூன்று வயதில் சிறிய கதாபாத்திரத்தில் வெள்ளித் துறையில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து சினிமாவில் பிரபலமானார். அதன் பிறகு கடந்த 2010-ஆம் ஆண்டு மனசார என்ற காதல் திரைப்படத்தில் நடித்த தெலுங்கு திரை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அந்த படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற படத்தில் நடித்தார்.

   

 

அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தமிழில் ஸ்ரீதிவ்யா கடந்த 2013-ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நகைச்சுவை படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அந்த படம் வசூல் மற்றும் விமர்சன அறிகுறியாக மாபெரும் வெற்றியை பெற்றது.

அதன் பிறகு காக்கிச்சட்டை, ஜீவா, வெள்ளக்காரதுரை, ஈட்டி என பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.