மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்னா லியோ தான் உயிரோட வந்து சொல்லனும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது.

2.43 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்பொழுது படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளும் பிசியாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் நடிகர் விஜய்க்கும் சண்டை என்றெல்லாம் கூறப்பட்டது. இதைப்பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்க பட்ட போது, ‘இந்த செய்தி என்னுடைய காதுக்கு வரும்பொழுது நானும் விஜயும் ஒன்றாகத் தான் இருந்தோம். இந்த செய்தியை கேட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்’ என்று கூலாக கூறியுள்ளார்.
