எப்படியோ ஒருவழியா கிடைச்சிருச்சுடா…! ரவீந்தருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…! குஷியில் மஹாலட்சுமி…!

By Begam on ஐப்பசி 6, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து  வந்தனர்.

   

சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்கவேண்டும் என்றும்,

   

 

அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார் மஹாலக்ஷ்மி. ஆனால் அந்த இரண்டு மனுக்களையுமே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ரவீந்தர் ஜாமீன் கேட்டு மீண்டும் கோர்ட்படி ஏற தற்போது அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிமன்றம், 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. தற்பொழுது தான் மஹாலக்ஷ்மி செம குஷியில் உள்ளார்.