நா பேசிட்டு இருக்கன்… நிறுத்துறீங்களா நீங்க.. வில்லங்கம் விசித்ராவை வச்சி செய்த வனிதாவின் மகள். (ப்ரோமோ)..

By admin on ஐப்பசி 6, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீடு இந்த சீசனில் இரண்டாக பிரிந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை விட வெளியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிகமான கண்டிஷன் போடப்பட்டுள்ளது.

 

   

   

இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, வினுஷா, அனன்யா ராவ், ரவீனா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவணன் விக்ரம், ஐஷு, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், ஜோவிகா, மணி சந்திரா, பூர்ணிமா, மாயா அக்ஷயா உதயகுமார் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வெளியானது. அதில் விசித்ரா அடிப்படை கல்வி எல்லோருக்கும் அவசியம் என கூறுகிறார். அதற்கு ஜோவிகா எல்லாருமே படிச்சிட்டு பெரிய ஆள் ஆகணும்றது இல்லை. நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிறுத்துங்க என கூறினார். அதற்கு விசித்ரா குறிக்கிட்டு பேசும் முன்பு படிப்பு என்கிற விஷயத்தால எல்லா பிள்ளைகளும் தப்பான வழியில் போறாங்க. அதை பற்றி பேச தான் நான் வந்தேன். நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிப்பாட்டுங்க என மறுபடியும் கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.