வாயை  வைச்சுக்கிட்டு சும்மா இல்லைன்னா இப்படிதான்…! பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர் இவர்தானா…?

By Begam on ஐப்பசி 4, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

   

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு சென்றனர். இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டு பாத்ரூம்களை கழுக வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாமினேஷனும் முடிந்தது.

   

 

இந்நிலையில் முந்தைய பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களையே சிலர் ஃபாலோ செய்வார்கள். அப்படிதான் கடந்த சீசன்களில் பங்கு பெற்ற பாலா மற்றும் அசீம் போன்றோரை பிரதிபலிக்கும் விதமாக பிரதீப் ஆண்டனி நடந்து வருகிறார். அதாவது அருவி, டாடா, வாழ் போன்ற படங்களில் நடித்தவர்தான் பிரதீப்.

ஆரம்பம் முதலே எடாகூடமான பேச்சால் சண்டையை ஆரம்பித்து விட்டார். மேலும் இந்த வார கேப்டனாக இருக்கும் விஜய் உடனும் ஏழரை ஆரம்பித்து விட்டார். எனவே பிரதீப்பின் பேச்சை மற்றும் செயல் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. இதனால் பிக் பாஸ் சீசன் 7 முதல் வாரமே பிரதீப் ஆண்டனி வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.