கடைசி படத்தில் சிவாஜிக்கு அடித்த ஜாக்பாட்.. விடாப்பிடியாக நின்ற ரஜினி.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த சிவாஜி கணேசன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக சிவாஜி கணேசன் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

   

இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருந்தார். இந்த படத்திற்கு அவர் 30 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கலாம் என நினைத்தார். அதற்குள் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தது. அதற்குக் காரணம் ரஜினி தானாம்.

   

 

ஏனென்றால் சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என ரஜினி கூறியுள்ளார். மேலும் தனக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் சிவாஜி ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் திரைப்படம் படையப்பா தான். கடைசி படமும் இதுதான்.