A.R. வீட்டிற்கு ஏலியனுடன் சென்ற சிவகார்த்திகேயன்… ‘அயலான்’ பட update-ஆ..? எதிர்பார்ப்பில் SK ரசிகர்கள்…

By Begam on ஐப்பசி 2, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

   

மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

   

 

இதைத்தொடர்ந்து இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது X தளத்தில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி டீசர்  வரும் 6 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதையறிந்த SK ரசிகர்கள் தற்பொழுது குஷியில் உள்ளனர். இதோ அந்த பதிவு…