இசை வெளியீட்டுக்கு பதிலாக.. லியோ படத்தின் அடுத்த அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்..!!

By admin on புரட்டாதி 30, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவான லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். இந்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

   

லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது.

   

 

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வைத்து லியோ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஜய், பட குழுவினர், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் என மொத்தம் 500 பேர் கலந்து கொள்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் பொதுமக்களோ, ரசிகர்களோ கலந்து கொள்ள அனுமதி இல்லை. விஜயின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் செம டிரீட்டாக அமைந்துள்ளது.