‘எனக்கும் ரக்ஷிதாவுக்கும் இன்னும் விவாகரத்தே ஆகலங்க’… ஆனா…? உண்மையை உடைத்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கார்த்திக்…!

By Begam on புரட்டாதி 29, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இவர் மன அமைதிக்காக வேண்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரக்ஷிதா  தனது கணவர் தினேஷ் தனக்கு  ஆபாசம் மெசேஜ் அனுப்பி தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசார் தினேஷை அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் போலீஸ் விசாரணையில், ‘தினேஷிடம் இருந்து எந்தவித ஆபாச மெசேஜும் வரவில்லை என்பதும்,  ரச்சிதாவை  பொய்யான புகார் அளித்திருந்ததும் நிரூபனமானது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து  அனுப்பினர்.

   

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டசீரியல் நடிகர் தினேஷ் கூறியதாவது, ‘எனக்கும் ரச்சிதாவிற்கும் விவாகரத்து வழக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. பிக்பாஸில் ரச்சிதா கலந்துகொண்ட போது அவர் வெற்றிப்பெற வேண்டும் என நினைத்தேன். ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றிப் பெற்று கொடுக்கலாம். ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விரும்பவில்லை, நான் இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.