ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்த படம் சரக்கு. இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்பட பல நடித்துள்ளனர். சரக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரும் கூல் சுரேஷ் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது கூல் சுரேஷ் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலை போட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த தொகுப்பாளினி அந்த மாலையை கழற்றி எறிந்தார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான் கூல் சுரேஷ் செய்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவன் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வைக்கிறேன் எனக் கூறி மன்னிப்பு கேட்க வைத்தார்.

இந்நிலையில் ஸ்கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோவில் நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலையை போட்டேன். அது தவறுதான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் மிகவும் வறுமையில் தவிக்கிறேன். எனவே யூட்யூபர்ஸ் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்யுங்கள். என் Gpay நம்பர் உங்களிடம் இருக்கும். அதற்கு பணம் அனுப்பி ஹெல்ப் பண்ணுங்க. மேலும் மன்சூர் அலி அண்ணா நீங்களும் உங்களால் முடிந்த அளவு எனக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
