Connect with us

என்னப்பா இது..! இப்பதான் பிறந்த மாதிரி இருந்துச்சு.. அதுக்குள்ள 1 வயசு ஆகிடுச்சா..? வைரலாகும் விக்கியின் பதிவு..!!

CINEMA

என்னப்பா இது..! இப்பதான் பிறந்த மாதிரி இருந்துச்சு.. அதுக்குள்ள 1 வயசு ஆகிடுச்சா..? வைரலாகும் விக்கியின் பதிவு..!!

 

முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டார். ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என பெயர் வைத்துள்ளதாக கூறினார்.

   

வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சினிமாவில் கவனம் செலுத்துவதோடு தனது குழந்தைகளையும் நயன்தாரா பராமரித்து வருகிறார் அவ்வபோது சமூக வலைதளத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், என் முகம் கொண்ட என் உயிர்… என் குணம் கொண்ட என் உலக்… இந்த வரிகளை புகைப்படத்துடன் ஒன்றாக வெளியிட நீண்ட காலம் காத்திருந்தேன். எனது மகன்கள் உயிர் உலக் ஆகியோருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணமான நாள் முதலே பல்வேறு விமர்சனங்களை கடந்து வந்து இப்போது தங்களது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இப்போது தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்த மாதிரி இருந்தது. ஆனால் அதற்குள் இருவருக்கும் ஒரு வயது ஆகிவிட்டது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

author avatar
Priya Ram
Continue Reading
To Top