கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளி பேருந்தில் மாணவர்களை பள்ளி முடித்தவுடன் வழக்கம் போல் அழைத்துச் சென்றுள்ளனர். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கும் போது ஜன்னல் ஓரத்தில் இருந்த ஓட்டையில் விரல் மாட்டிக்கொண்டது. உடனே அருகில் இருந்த மாணவர்கள் பேருந்து டிரைவரிடம் தெரிவித்துள்ளனர்.
உடன் இருந்த மாணவர்கள் சிறுமியின் விரலை எடுக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் விரல் வராதக் காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தகரத்தை வெட்டி எடுத்து மாணவியின் விரலை வெளியே எடுத்துள்ளனர்.
