தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தார் நாகா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மூன்று பேரும் பதுகம்மா நடைபெறுவதாக கூறி வெளியே சென்றுள்ளனர். ஆனால் வெளியே சென்ற மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் மாயமான மூன்று மாணவிகளையும் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி மூன்று மாணவிகளும் ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர் மது (19(என்பவருடன் யாதகிரி குட்டா என்ற சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு மதுவின் நண்பர்கள் அரவிந்த் (22) மற்றும் நீரஜ் (22) ஆகியோரும் சென்றுள்ளனர். மூன்று மாணவிகளையும் தங்கும் விடுதியில் தங்க வைத்து மது உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. பிறகு நைசாக மூன்று மாணவிகளையும் அழைத்துச் சென்ற இடத்திற்கே கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் மது உள்ளிட்ட மூன்று பேரையும் அவர்கள் தங்கும் விடுதியில் அரை கொடுத்த நபரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
