புத்தாடை எடுக்க பணம் தராததால் 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த ஈடிகை தோப்பு பகுதியில் வெங்கடேசன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகின்றார். இவருடைய மகன் தனசேகரன் கணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். தனசேகரனுக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் தன்னுடைய பெற்றோரிடம் புற்றாடை வாங்குவதற்கும் நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கவும் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளான். அதற்கு வெங்கடேசன் தன்னிடம் தற்போது பணம் இல்லை, கூலி வாங்கிய பிறகு பணம் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தன் தந்தையிடம் தனசேகரன் சண்டை போட்டுள்ளார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறைக்கு சென்ற தனசேகரன் அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனசேகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
