“அதிமுக – தவெக கூட்டணி உறுதி?”…. அரசியல் களத்தை உலுக்கிய என். ஆனந்தின் பரபரப்பு பேச்சு…. தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பம்….!

By Nanthini on ஆனி 15, 2026

Spread the love

அதிமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தொண்டர்கள் இணையும்போது 99 சதவீத வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான என். ஆனந்த் தெரிவித்துள்ளார். கட்சி விழா ஒன்றில் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், “நாம் அனைவரும் எப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, நமக்கு முன்னால் வரும் சவால்களை நேருக்கு நேராக நின்று சந்திக்க வேண்டும்; நமது முதல்வர் விஜய் என்ன கட்டளையிடுகிறாரோ, அதையே நாம் அப்படியே செய்வோம்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அண்மைக்காலமாக அதிமுக குறித்தும், இரண்டு கட்சிகளின் கூட்டணி சாத்தியக்கூறுகள் குறித்தும் தவெக தரப்பிலிருந்து தொடர்ந்து வெளியாகி வரும் இத்தகைய சாதகமான கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளன.