மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் 96 ராம் – ஜானு.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.. வைரல்..

By Priya Ram on மார்ச் 29, 2024

Spread the love

விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்த 96 படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. பள்ளி பருவத்தில் காதலித்த ஜோடிகள் பிறகு சூழ்நிலையால் பிரிந்து விடுகின்றனர். சில வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும்போது பழைய நினைவுகளை பேசி மகிழ்கின்றனர்.

   

இந்த 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக கௌரி கிஷன் நடித்தார். பள்ளி பருவத்தில் விஜய் சேதுபதியாக எம்எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்தார். இந்த படம் இருவருக்கும் பெரும் திறப்பு முனையாக அமைந்தது.

   

 

இந்த நிலையில் கௌரி கிஷன் ஆதித்யா பாஸ்கர் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மீண்டும் ஜோடியாக ஹாட்ஸ்பாட் என்ற படத்தில் நடிக்கின்றனர்.

அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இன்று ஹாட்ஸ்பாட் திரைப்படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.