நடிகை கௌரி கிஷான் மாடர்ன் உடையில் சில கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற படம் ”96”. பள்ளி வயது காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிசான். திரைத்துறையில் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.

இதை அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் ”மாஸ்டர்” படத்திலும் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த இந்த படம் 2021ல் வெளியானது. இந்த படத்தில் சவிதா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிறிது நேரம் வந்து சென்றாலும் கல்லூரி பேராசிரியர் விஜயுடன் முக்கிய காட்சியில் இடம் பெற்றுள்ளார் கௌரி. எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 96 திரைப்படம் தான் இவருக்கான அடையாளமாய் மாறிப் போனது. தனது முதல் திரைப்படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.
இவர் திரைப்படங்களில் மட்டுமே மிகவும் அடக்கமாக நடிப்பார். ஆனால் சமூக வலைத்தளங்களில் தனது அழகை கன்னாபின்னாவென காட்டி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை கௌரி கிஷன்.

தற்போது அவர் மாடல் போன்று சில மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மாடலாக மட்டுமின்றி சேலையிலும் படு கிளாமராக புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ”96 படத்தில் வரும் ஜானுவா இது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
