மக்களே ரெடியா?… வார விடுமுறை… தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 920 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை 340 பேருந்துகளும், நாளை மறுநாள் 350 பேருந்துகளும் புறப்படும். அதேபோல கோயம்பேட்டில் நாளை 55 பேருந்துகளும் நாளை மறுநாள் 55 பேருந்துகளும், திருப்பூர், கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு 100 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.