டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… SBI-யில் 9,124 பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

SBI வங்கி தனது வாடிக்கையாளர் உதவி மற்றும் விற்பனைப் பிரிவில் 9,124 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற, 28 வயதுக்கு உட்பட்ட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வழக்கமான வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். தேர்வாகும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ 24,050 முதல் ரூ 64,480 வரை வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கான ஆள்தேர்வு முதலநிலைத் தேர்வு , முதன்மைத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறும். தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் வங்கிப் பணிக்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள https://sbi.bank.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.