90ஸ் கனவுக்கன்னி நடிகை சௌந்தர்யாவை போலவே அச்சு அசலாய் இருக்கும் பெண்… வைரலாகும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்…

By Begam on தை 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் ‘பொன்னுமணி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜய்காந்த் போன்றோருடன் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

   

இவர் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர். நடிகர் ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம் ,படையப்பா போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். 2004 இல் பாரதிய ஜனதா கட்சிக்காக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவருடைய மரண செய்தி அறிந்த ரசிகர்கள் பெரும் கவலையடைந்தனர்.

   

 

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்களில் படையப்பா, காதலா காதலா, அருணாச்சலம், பொன்னுமணி, தவசி போன்ற திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் அச்சு அசலாய் நடிகை சௌந்தர்யாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். யார் அவர்? என்று அறியவும் ஆவலாக உள்ளனர்.

வைரலாகும் அந்த பெண்ணின் புகைப்படம் இதோ…