திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம்.. ‘உயிருள்ளவரை உஷா’ பட நடிகர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..

By Begam on கார்த்திகை 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் கதாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கங்கா. இவர் டி ராஜேந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான ‘உயிருள்ளவரை உஷா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.  இப்படத்தின் கதை, வசனம், பாடல், இசை என ரசிகர்களால் அனைத்தும் பாராட்டப்பட்டது.

   

மேலும் உயிருள்ளவரை உஷா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வெள்ளிவிழா கண்டது. இப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் கங்கா,  அதன்பிறகு மாதவன் தயாரிப்பில் வெளியான ‘கரை தொடும் அலைகள்’ படத்தில் நடித்திருந்தார். ‘முருகனே துணை’ என்ற படத்தில் ராஜேஷ், மாதிரி, சுதா சந்திரனுடன் கங்கா நடித்திருந்தார். அதன்பிறகு விசு இயக்கத்தில் வெளியான ‘மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு’ போன்ற படங்களில் கங்கா நடித்து இருந்தார்.

   

 

இதை தொடர்ந்து ‘அம்மா பிள்ளை’ போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அப்போதைய காலகட்டத்தில் காதல் படங்கள் என்றாலே பெரும்பாலும் கங்கா நடித்திருப்பார். இவர் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு சின்னத்திரை தொடர்கள் மற்றும் நெடுந்தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்ற எந்த தகவல்களும் இல்லாமல் இருந்தார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 63 வயதாகும் இவருக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர். தற்பொழுது இந்த செய்தியானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.