“டாக்டர் குழந்தையை காப்பாத்துங்க” வடிகாலில் விழுந்த 8 வயது சிறுமியை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்… உ.பியை உலுக்கிய வீடியோ..!!

By Soundarya on ஆவணி 14, 2025

Spread the love

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் எட்டு வயது சிறுமியின் அசைவற்ற உடலை சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு ஒருவர் ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கோரக்பூர் மாநகராட்சியின் திவார்பூர் காவல் நிலையப் பகுதியில், வீடியோவில் காணப்பட்ட சிறுமி திறந்தவெளி வடிகாலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் இருந்தவர்கள் சிறுமியை  வடிகாலில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே  மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் திவார்பூர் காவல் நிலையப் பகுதியின் கோசிபூர் பகுதியில் உள்ள லாலா டோலியில் வசிக்கும் அனிஸின் மகள் அஃப்ரீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கள்கிழமை, சிறுமி மதரஸாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பலத்த மழையின் மத்தியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் நடந்து சென்று கொண்டிருந்த அஃப்ரீன், கால் தவறி திறந்தவெளி வடிகாலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.