சந்தோஷமா போன சுற்றுலா… சில வினாடிகளில் நடந்த கோரம்… அலறித் துடித்த 8 மாணவர்கள்… கடற்கரையில் நடந்தது என்ன?…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள திவேகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற புனேவைச் சேர்ந்த 8 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். புனேவில் உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் இந்த மாணவர்கள், கடலின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் அபாயத்தை உணராமல் தண்ணீரில் இறங்கியதால் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 48 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடற்கரையில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தபோது, 8 மாணவர்கள் மட்டும் கடலுக்குள் இறங்கியுள்ளனர். ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள், நீரோட்டத்தின் வேகம் மற்றும் கடல் அலைகளின் சீற்றத்தை கணிக்க முடியாமல் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு எட்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.

   

மீட்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, சுற்றுலாச் செல்லும் மாணவர்களுக்கு கடலின் தன்மையைப் பற்றியும், ஆழமான பகுதிகளில் உள்ள ஆபத்துகள் குறித்தும் உரிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் தலைவர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.