வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பெயர்கள் நீக்கம்..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

By Soundarya on மார்கழி 4, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள்(SIR ) நடைபெற்று வருகிறது. இதற்கு டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகள் வரும் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பெயர்கள் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.