முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வில் நிலவி வரும் கூட்டணி குழப்பம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மொத்தமுள்ள 88 மாவட்டச் செயலாளர்களில் சுமார் 75-க்கும் மேற்பட்டோர் (சுமார் 80% பேர்) நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கூட்டணி அமைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இக்கட்டான சூழலிலும் ஓபிஎஸ் எந்தவித இறுதி முடிவையும் எடுக்காமல் மௌனம் காப்பது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மனம் நொந்து பேசியுள்ள நிர்வாகிகள், “நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தலைமையிடமிருந்து முறையான பதில் இல்லை. களத்தில் வேலை செய்யும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு தவெக-வுடன் கூட்டணி வைத்தால் தனது ‘அதிமுக வாரிசு’ என்ற அடையாளம் பறிபோய்விடுமோ எனத் தயங்குவதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஒரு மாவட்ட நிர்வாகமே ஒட்டுமொத்தமாக விலகியிருப்பது ஓபிஎஸ் அணிக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர்கள் விரைவில் விஜய்யின் தவெக-வில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…