தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எத்தனயோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் சிலரின் சினிமா பயணம் என்பது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை சௌகார் ஜானகி. தமிழ் சினிமாவின் பெருமை என்று இவரை கூறலாம். 93 வயதான இவருடைய சினிமா வாழ்க்கை பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் தான் சௌகார் ஜானகி. 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். இவருடைய குரலைக் கேட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அனுப்பிய போது அவருடைய குடும்பத்தார் மறுத்ததுடன் உடனே திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.
குடும்பத்தின் வறுமை மற்றும் கைக்குழந்தை என சினிமா கனவுகளை கண்களில் தாங்கிக் கொண்டு தயாரிப்பாளர் வீட்டை அணுகினார். குழந்தை உள்ளது கல்யாணம் வேறு ஆகிவிட்டது நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று மறுப்பு தெரிவித்தார். பிறகு அவரது தம்பி எடுக்கும் படத்தில் சௌகார் ஜானகியை பரிந்துரைத்தார். தெலுங்கானாவின் முதல்வர் என்டிஆர் நடித்த சவுகார் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் 1947 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்து இவருடைய சினிமா பயணம் உச்சத்திற்கு சென்றது. இந்த படத்திற்கு பிறகுதான் சௌகார் ஜானகி என்று அழைக்கப்பட்டார்.
தமிழில் ஜெமினி நிறுவன படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தவர் காஸ்ட்யூம் மேனேஜராக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக மாறிய ஜெமினி கணேசன் தான். மறைந்த முன்னாள் கருணாநிதி எழுத்தில் உருவான குலக்கொழுந்து திரைப்படத்தில் சௌகார் ஜானகி நடித்தார். ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆர் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி ஆந்திர முதல்வர் என் டி ஆர் உடனும் நடித்துள்ளார். இவர்களைத் தவிர சிவாஜி மற்றும் நாகேஸ்வரராவ் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், சிவகுமார் மற்றும் ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர் சௌகார் ஜானகி.
இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், ரஜினியின் தாயாராக தில்லுமுல்லு மற்றும் கமலுடன் சிறிய வயதாக இருக்கும்போதே பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டு காலம் ஏராளமான திரைப்படங்களில் சௌகார் ஜானகி நடித்துள்ளார். தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என மூன்று முதல்வர்கள் உடன் கலைப் பயணத்தை தொடர்ந்தவர் தான் நடிகை சௌகார் ஜானகி. இவருக்கு கடந்த 1968 ஆம் ஆண்டு கலைமாமணி விருது அண்ணா கையால் கிடைத்தது. பின்னர் இரு கோடுகள் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். மேலும் கலைமாமணி விருது மற்றும் நந்தி விருது என பல ஏராளமான விருதுகளை நடிப்புக்காகப்பெற்ற சினிமாவின் பெருமைக்குரியவர் தான் இந்த சவுகார் ஜானகி.