தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
அடுத்தடுத்த பல அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகின்றார். இதனிடையே ஆளும் கட்சியான திமுகவில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் போட்டியிட்டவர்களில் 90% பேருக்கு 2021 ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டு திமுக 125 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
தற்போது கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ரகசிய சர்வே நடத்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் பெரும்பாலானோருக்கு சீட் மறுக்கப்படும் என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது. அதே போன்று, திமுகவில் சீனியர்களாக உள்ள துரைமுருகன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர், பொன்முடி, ரகுபதி, காந்தி என பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…
ஹரித்துவாரில் கங்கை நதி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக அதன் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அதிகமாக…