தலைநகர் சென்னையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சரவணன் என்ற நபர், இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளான்.
வலியால் துடித்துக் கதறிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையைக் பெற்றோரிடம் கூற, அதைக் கேட்டு உறைந்துபோன அவர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளியான சரவணனை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
