பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் கோபால் சவுத் பகுதியில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் இங்கு ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த விடுதியில் தங்கி 7 வயது சிறுவன் ஒருவன் கல்வி பயின்று வந்துள்ளான். இந்நிலையில் விடுதியில் இருந்த சிறுவன் நேற்று மர்மமான முறையில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளான்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து விடுதிக்கு பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த சிறுவனின் குடும்பத்தினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவனை கொலை செய்தது யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதிக்கு படிக்கச் சென்ற மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
