“இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு”… ரயில்வேயில் உங்களுக்காகக் காத்திருக்கும் 6,500+ வேலைகள்… இந்த ஒரு தகுதி இருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்…!

By Visaka on ஆடி 8, 2026

Spread the love

மத்திய ரயில்வே துறையில் வேலை தேடுபவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் (கிரேடு 1 மற்றும் கிரேடு 3) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்றவாறு ITI, டிப்ளமோ, B.E/B.Tech அல்லது B.Sc போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இதில் டெக்னீஷியன் கிரேடு 1 பணிக்குத் தேர்வாகுபவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ 29,200-மும், கிரேடு 3 பணிக்கு ரூ 19,900-மும் சம்பளமாக வழங்கப்படும். தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு (CBT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 500 ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அதிகாரப்பூர்வ லிங்க் வழியாக வரும் ஜூலை 29-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.