“நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?”… ஒரே ஒரு வார்த்தை… காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட 65 வயது மூதாட்டி… முட்புதரில் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில், கடந்த 21-ஆம் தேதி சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நில உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முற்றிலும் சிதைந்திருந்ததால் கொலையுண்டவர் யார் என்பதைக் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியைச் சேர்ந்த 65 வயதான வளர்மதி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் கள்ளத்தொடர்பு மற்றும் பணத்தகராறு என்பது வெளிச்சத்திற்கு வந்தது. வளர்மதியுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி விஜயகுமார் (வயது 41) என்பவருடன் வளர்மதிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. சம்பவத்தன்று விஜயகுமார் மதுபானம் வாங்கிக்கொண்டு வளர்மதியைத் தனியாக ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   

அங்கு அதிகளவில் மது அருந்தியிருந்த விஜயகுமாரால் எதுவும் செய்ய இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வளர்மதி, “நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று விஜயகுமாரை கடுமையான வார்த்தைகளால் அவமதித்துப் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அதே நேரத்தில், வீட்டிற்கு சிலிண்டர் வாங்குவதற்காக வளர்மதி விஜயகுமாரிடம் வாங்கியிருந்த 5,000 ரூபாய் கடனை விஜயகுமார் திருப்பிக் கேட்டதால் தகராறு மேலும் தீவிரமடைந்தது.

   

வார்த்தை தடித்த நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற விஜயகுமார் தான் வைத்திருந்த கத்தியால் வளர்மதியின் கழுத்தை சரமாரியாக அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடிய அவர், வளர்மதி அணிந்திருந்த தங்கக் காதுத் தோட்டைப் பறித்துச் சென்று 22,000 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக விஜயகுமாரைக் கைது செய்த காஞ்சிகோவில் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவமதிப்புப் பேச்சால் நிகழ்ந்த இந்த முதிய பெண் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.