3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது முதியவர் மீது, உயர்மின்னழுத்தக் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுலால் குப்தா (65) என்ற கொத்தனாார், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடாவில் உள்ள காயத்ரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது வீட்டின் 3-வது மாடி பால்கனியில் நின்றுகொண்டு குட்கா மென்றபடியே கீழே துப்பியுள்ளார்.

   

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மிக அருகில் சென்றுகொண்டிருந்த 11kV உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பியில் அந்த எச்சில் தாரை பட்டுள்ளது. எச்சிலில் உள்ள உப்புகள் மற்றும் ஈரப்பதம் காரணமாக அதில் மின்சாரம் பாய்ந்து, நொடிப்பொழுதில் முதியவர் பிரபுலால் குப்தா மீது மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

வீடுகளுக்கு மிகவும் அருகில் ஆபத்தான முறையில் உயர்மின்னழுத்தக் கம்பிகள் செல்வது குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடன் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.