#image_title
கல்வி கண் போன்றது, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே, வேறு எந்த சொத்து இருந்தாலும் நம்மை விட்டு சென்றுவிடும் நாம் படித்த கல்வி அறிவு ஆனது கடைசி வரை நம்முடன் வரும் என்று பலமொழிகள் கல்வியை பற்றி கூறுவர். பலர் கல்வியின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பர். தங்களுக்கென்று வாழ்நாள் லட்சியம் வைத்துக் கொண்டு படிப்பவர் இருக்கிறார்கள்.
ஒரு சிலர் வயதானாலும் சரி தனது லட்சியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பவர்களும் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் படிப்புக்காகும் செலவு கூட அதிகம் தான். ஆனால் நல்ல மதிப்பெண்களும் தேர்வுகளையும் கிளியர் செய்தால் அது கொஞ்சம் குறைக்கலாம். இதுபோல இளம் வயதில் தான் கொண்ட கனவை முதுமையானாலும் அதை விடாமல் பிடித்து நிறைவேற்றி இருக்கிறார் 64 வயதாகும் நபர்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஜெய் கிஷோர் பிரதான். இவருக்கு வயது 64. எஸ் பி ஐ வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் ஜெய்கிஷோர். காலம் ஓடிப் போக பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீட் தேர்வை எழுதி எப்படியாவது மருத்துவராக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார் ஜெய்கிஷோர். குடும்பத்தார் அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து நீட் தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தார் ஜெய் கிஷோர். விடாமுயற்சியுடன் பரிட்சைக்கு தயார் செய்து வந்த ஜெய் கிஷோர் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் தற்போது மருத்துவம் படிப்பதற்கு சேர்ந்திருக்கிறார் ஜெய் கிஷோர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல விடாமுயற்சியும் ஆர்வமும் இருந்தால் போதும் என்பதற்கு சான்றாக 64 வயதாகும் கிஷோர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்ல ஒரு முன்மாதிரியாகவே இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…