வானில் 30,000 அடி உயரத்தில் மரணம்… விமானத்தில் 13 மணிநேரம் சடலத்துடன் பயணம்…. ஹீத்ரோ விமானத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

ஹொங்கொங்கில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கிப் பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட அடுத்த அரை மணி நேரத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான மரணம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் விமானிகள் மத்தியில் குழப்பம் நிலவினாலும், விமானத்தைத் திருப்பாமல் திட்டமிட்டபடி 13.5 மணிநேரப் பயணத்தைத் தொடர அவர்கள் முடிவெடுத்தனர்.

பயணத்தின் போது உயிரிழந்த பெண்ணின் உடல் துணிகளால் சுற்றப்பட்டு, விமானத்தின் பின்புறம் உள்ள சமையலறைப் (Galley) பகுதியில் வைக்கப்பட்டது. இருப்பினும், அந்த அறையின் தரைப்பகுதி வெப்பமடையும் வசதி கொண்டதாக இருந்ததால், நீண்ட நேரப் பயணத்தின் இறுதியில் சடலம் சிதைவடைந்து விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இது சக பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியது. லண்டனில் விமானம் தரையிறங்கியதும் காவல்துறையினர் உடலை மீட்டனர்.

இந்தச் சம்பவம் விமானப் பணியாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில் சிலர் பணியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago