BREAKING: 6 MP-க்கள் கட்சியில் இருந்து விலகல்… அரசியலில் திடீர் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான 6 எம்.பி.க்கள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு சிவசேனாவை உடைத்து தனியாகப் பிரிந்து ஆட்சியமைத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு இந்த கட்சித் தாவல் மிகப்பெரிய அரசியல் வெற்றியாகவும், அவரது செல்வாக்கை நிரூபிக்கும் பலமான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது; அதே வேளையில், இந்தத் திடீர் விலகல் இண்டியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சவாலையும், அரசியல் ரீதியாக ஈடுசெய்ய கடினமான பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.