Connect with us

6 மாத சிறைத்தண்டனை… 20 லட்சம் டெபாசிட்… நடிகை ஜெயப்பிரதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

CINEMA

6 மாத சிறைத்தண்டனை… 20 லட்சம் டெபாசிட்… நடிகை ஜெயப்பிரதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

 

80ஸ் காலகட்டத்தில் தமிழின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர் தமிழில் மன்மத லீலை ,நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட ஹிட்  படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

   

இவர் தனது 30 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நடிகை ஜெயபிரதா 2004 ஆம் ஆண்டு முதல் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினார். அவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரிய ஈடுபாடு கொண்டவர் நடிகை ஜெயப்பிரதா. சென்னையில் அவரது பெயரின் ஒரு திரையரங்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ஜெயப்பிரதாவின் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் 1986-ல் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சந்திரா என்பவரை திருமணம் செய்த இவருக்கு மூன்று குழந்தைகளை உள்ளனர். முதல் மனைவியை  விவாகரத்து செய்யாமலே இவர் நடிகை ஜெயப்பிரதாவை  திருமணம் செய்து கொண்டார் .

இந்நிலையில் நடிகை ஜெயபிரதா நடிகை ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அதாவது நடிகை ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து அண்ணாசாலையில் தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு தொழிலார்களின் இஎஸ்ஐ பணத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து மீண்டும் ஜெயப்பிரதா தரப்பில் இருந்து எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீடு தொடர்பான மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தது மட்டும் இன்றி, 15 நாட்களுக்குள் 20 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய கோரி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top