மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில், கடந்த ஓராண்டு காலமாக ‘அய்யனார் குளத்தில்’ தஞ்சம் புகுந்துள்ள முதலையினால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் இடமாகவும் விளங்கி வந்தது. ஆனால், கடந்த ஓராண்டு காலமாக அங்கு பதுங்கியிருக்கும் முதலையின் நடமாட்டத்தால், தற்போது அந்தப் பகுதியே மரண பீதியில் ஆழந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த முதலையின் நடமாட்டம் யாருக்கும் தெரியாத நிலையில், சமீபகாலமாக கரையில் மேயும் ஆடு மற்றும் கோழிகளை அது வேட்டையாடத் தொடங்கிய பின்னரே அதன் விபரீதம் ஊர் மக்களுக்குப் புரிந்தது. இதுவரை சுமார் 6 ஆடுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கோழிகளை அந்த முதலை இரையாக்கியுள்ளதாகக் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அருகில் உள்ள நெட்டகுளத்திற்குச் செல்வதும், அதிகாலையில் மீண்டும் அய்யனார் குளத்திற்குத் திரும்புவதுமாக இந்த முதலை மிகவும் வினோதமான முறையில் போக்கு காட்டி வருகிறது.
பகல் நேரங்களில் குளத்தின் கரையிலேயே சாவகாசமாகப் படுத்திருக்கும் முதலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், இது குறித்து வனத்துறையினருக்குப் புகார் அளித்தனர். கடந்த மாதம் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போதிலும், முதலை சிக்காமல் போக்கு காட்டியதால் தேடுதல் பணி தற்காலிகமாகத் தொய்வடைந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் முதலை தென்பட்டது கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும், உயிருக்குப் பயந்து அலறியடித்து ஓடும் சூழலையும் உருவாக்கியுள்ளது.
தற்போது சீர்காழி வனத்துறையினர் மீண்டும் அந்தப் பகுதியில் விரைந்து முகாமிட்டுள்ளனர். முதலையைப் பிடிக்கக் கூண்டுகள் வைக்கப்பட்டும், வலைகள் விரித்தும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்கள் வாழ்வாதாரமான கால்நடைகளைப் பாதுகாக்கவும், அச்சமின்றி நீர் நிலைகளைப் பயன்படுத்தவும் அந்த முதலையை உடனடியாகப் பிடித்துப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே குன்னம் கிராம மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. தற்போது அந்தப் பகுதி முழுவதும் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…