அடப்பாவமே..! ‘பசி வந்தா பத்தும் பறந்துடும்’… 3 கோல்ஃப் பந்துகளை முழுங்கி நகர முடியாமல் தவித்த 6 அடி பாம்பு… இணையத்தில் ட்ரெண்டாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Gayathri on புரட்டாதி 28, 2026

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நள்ளிரவில் ஆறு அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று நுழைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கோல்ஃப் பந்துகளைப் பார்த்த அந்தப் பாம்பு, அவற்றை முட்டைகள் எனத் தவறாகக் கருதி அடுத்தடுத்து மூன்று பந்துகளை விழுங்கியுள்ளது. கடினமான அந்தப் பந்துகளைத் தின்றதால், எடையின் காரணமாக அங்கிருந்து ஊர்ந்து செல்ல முடியாமல் அந்தப் பாம்பு அதே இடத்திலேயே நகர முடியாமல் தவித்துள்ளது.

பாம்பு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்கள், உடனடியாக அதனை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் பாம்பிற்கு மயக்க மருந்து அளித்து, அதன் வயிற்றில் சிக்கியிருந்த பந்துகளை மிகவும் கவனமாக ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அதன் உயிரைக் காப்பாற்றினர். தங்களுக்கே இது ஒரு விசித்திரமான மற்றும் மறக்க முடியாத அனுபவம் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். சிகிச்சை முடிந்து முழுமையாகக் குணமடைந்த அந்தப் பாம்பு, பின்னர் வனவிலங்குப் பாதுகாப்புத் துறையினரின் உதவியுடன் காப்பகத்தில் பத்திரமாக விடப்பட்டது.