அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 6 மூத்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியிருந்த நிலையில், தற்போது முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்திருப்பது மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்தப் புறக்கணிப்பு அதிமுகவிற்குள் நிலவும் உட்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
