பாட்னாவின் சிட்கோரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் நேற்று 5 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கழிப்பறைக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சிறுமி உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே கழிப்பறையிலிருந்து புகை வந்ததாகவும். ஆசிரியர்களும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மாணவி சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பள்ளி ஊழியர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பள்ளிக்கு விரைந்து சென்று அந்த நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் குற்றம் சாட்டினர். கோபமடைந்த குடும்பத்தினரும் குடியிருப்பாளர்களும் ஊழியர் அறையை சேதப்படுத்தி, காவல்துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் அதிகரித்தது.
பள்ளி ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். போலீசார் விசாரணையைத் தொடங்கி, தடயங்களைக் கண்டறிய பள்ளி வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்திற்கு முன்பு சிறுமியின் மனநிலையைப் புரிந்துகொள்ள அதிகாரிகள் சிறுமியின் வகுப்பு தோழர்களிடமும் பேசி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…