சற்றுமுன்: குஷியோ குஷி…. ரூ.5,000 உயர்வு…. தமிழக அரசு அறிவித்தது….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, கலை மற்றும் பண்பாட்டுத் துறை கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான கலை உபகரணங்கள், இசைக் கருவிகள் மற்றும் ஆடைகளை வாங்குவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டம் மேலும் 1,500 கலைஞர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், கலை உலகினரும் நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களும் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.