ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய பாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால், அந்தச் சிறுமி தனது விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டிற்குச் சென்று, அவருக்குச் சமையல் செய்து கொடுத்துப் பராமரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் தந்தையின் நண்பரான மணி (50) என்ற நபர், கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். கொளப்பலூர் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் அவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கட்டாயப்படுத்தி அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் கூறினால் தந்தையைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதால், பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்தது அவருக்கும் தெரியாமல், பெற்றோர்களும் கவனிக்காமல் இருந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு, சிறுமிக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள் அவரை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாதக் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் தேவகி என்பவர், கடந்த மே 7ஆம் தேதி பெருந்துறை மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விரிவான விசாரணை நடத்தினார். விசாரணையில், தந்தையின் நண்பரான மணி மிரட்டிச் சீரழித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவகி முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 50 வயது குற்றவாளி மணியைப் போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலுக்குள், பாரம்பரியமிக்க அந்தப் புனிதத் தலத்தின் விதிகளை…
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 14 வயது வளர்ப்பு மகளைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த வளர்ப்பு…
உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய…
மத்திய அரசின் 'PM கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000…
மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90…
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…