மம்தாவுக்கு அடுத்த பேரதிர்ச்சி..! பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்..? 20 எம்பிக்களும் ராஜினாமா..? சுவேந்து அதிகாரி போட்ட மாஸ்டர் பிளான்..!

Spread the love

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்து, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் கட்சியில் கடுமையான உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சுமார் 50 எம்எல்ஏக்களும், 20 எம்பிக்களும் தங்களின் சொந்தத் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணையத் தயாராகக் காத்திருப்பதாகவும் பாஜக எம்பி சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார். பாஜக மத்திய தலைமை பச்சைக்கொடி காட்டினால் திரிணாமுல் காங்கிரஸ் என்ற அரசியல் சக்தியே முற்றிலும் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் இந்த வாதத்தை அடியோடு மறுத்துள்ள மூத்த திரிணாமுல் எம்பி சௌகதா ராய், இதில் துளியும் உண்மையில்லை என்றும், பாஜக திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், திரிணாமுல் கட்சியின் லோக்சபா தலைமைக் கொறடா பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாராசாத் தொகுதி எம்பி காகொலி கோஷ் தஸ்திதருக்கு மத்திய அரசு உடனடியாக ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேலும், முதல்வர் சுவேந்து அதிகாரி நடத்திய முக்கிய அரசு நிர்வாகக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பையும் மீறி காகொலி கோஷ் தஸ்திதர் மற்றும் பல திரிணாமுல் எம்எல்ஏக்கள் நேரில் பங்கேற்றது மம்தா தரப்பிற்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தாவல் ஒருபுறமிருக்க, மேற்கு வங்கத்தின் பட்ஸ்பாரா, ஹலிசஹர், காஞ்ச்ராபாரா உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். கொல்கத்தா மாநகராட்சி மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீமும் தனது பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மம்தா பானர்ஜி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பாஜக அரசு கடந்த கால உள்ளாட்சி நிர்வாக முறைகேடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதும், வேலைவாய்ப்பு முறைகேடு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதும், இந்த ஒட்டுமொத்த ராஜினாமாக்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

7 மணத்தியாலங்கள் ago