அதிமுகவை அடுத்தடுத்து காலி செய்யும் தவெக.. ஆதரவாளர்களுடன் கமலக்கண்ணன் திடீர் தாவல்..அதிர்ச்சியில் எடப்பாடி..! பின்னணி என்ன..?

Spread the love

அதிமுகவின் மிக முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான ‘அண்ணா தொழிற்சங்க பேரவை’யின் மாநிலச் செயலாளரான கமலக்கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தமிழகத்தில் போக்குவரத்து, டாஸ்மாக் மற்றும் மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அசுர பலத்துடன் விளங்கும் இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 5.42 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலச் செயலாளர் கமலக்கண்ணனின் இந்த திடீர் இடமாற்றம், அதிமுகவின் அடிமட்டத் தொழிலாளர் அமைப்புக் கட்டமைப்பிற்கு விழுந்த மிகப்பெரிய பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த முக்கிய எம்எல்ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய நால்வர் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் அக்கட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, தொழிலாளர் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு மிக்க கமலக்கண்ணனும் தற்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது கட்சியை கட்டமைப்பு ரீதியாக தரைமட்ட அளவில் வலுப்படுத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே, அதிமுகவின் ஒவ்வொரு பிரிவையும் தவெகவுடன் இணைக்கும் முயற்சிகளுக்கு அவர் ஒப்புதல் அளித்து வருகிறார். இந்த இணைப்பின் மூலம் தவெகவின் தொழிற்சங்க கட்டமைப்பு பலம்பெறும் என்றும், இதனால் தமிழக அரசியலில் தவெக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

7 மணத்தியாலங்கள் ago