காலையிலேயே விவசாயிகளுக்கு குட் நியூஸ்… 50,000 இலவச மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ஒப்புதல்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தமிழகத்தில் இந்த வருடம் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை தொடங்குவதற்கு மின்வாரியத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் மானியமாக வழங்கி வருகிறது. அரசும் மின்வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் விவசாய மின் இணைப்பு உடனே வழங்கப்படுவது கிடையாது.

எனவே ஒவ்வொரு வருடமும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்படி விவசாய மின் இணைப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுகின்றது. தற்போது 50,000 விவசாயம் மின் இணைப்பு வழங்கும் பணிகளை தொடங்க மின்வாரியத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் செய்தி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.