தமிழக அரசு, வாட்ஸ்ஆப் மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த, ஒரு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் “மெட்டா” நிறுவனதின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் கலந்து கொண்டனர்.
இந்த “வாட்ஸ்ஆப் சாட்பாட்டினை”தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தலாம். இதன்மூலம் புகார் அளிப்பது, மின்சார கட்டணம் செலுத்துவது, குடிநீர் கட்டணம் செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற சேவைகளை எளிதாக செய்ய இயலும். இதனால் அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கும். முதலில் மாநிலம் முழுவதும், 50 அத்தியாவசிய அரசு சேவைகளை மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வாட்ஸ்ஆப் மூலம் பயன்படுத்தலாம். இச்சேவை மிக விரைவில் தொடங்கப்படும் என கருதப்படுகிறது.
