ஐயோ… பாப்பா இறங்குறா நில்லுங்க… கதறலை கண்டுகொள்ளாமல் இயக்கப்பட்ட… பள்ளிப் பேருந்து சக்கரத்தில் நசுங்கி… 5 வயது சிறுமி பரிதாப பலி… நெஞ்சைப் பிளக்கும் சோகம்…!

By Swetha on ஆவணி 23, 2026

Spread the love

எடா பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 5 வயது சிறுமி, பள்ளிப் பேருந்தில் இருந்து கீழே இறங்கும்போது அதிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறங்குவதற்குள் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதே இந்த கோர விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பள்ளி நிருவாகத்தின் அலட்சிய போக்கே ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துவிட்டதாக கூறி, சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

   

https://twitter.com/RajuSharmajour1/status/2091077496699768856/video/1

   

இச்சம்பவம் குறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அலட்சியமாக வாகனத்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.