“மாமா கிட்ட வா சாக்லேட் தாரேன்”…. சிறுமியை தனியாக அழைத்து சென்ற காவலாளி…. தந்தைக்கு வந்த ஹிந்தி போன் கால்…. அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்டம் பொள்ளாராம் பகுதியில் உள்ள ஆர்க்கிட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வேளாண்துறை ஆராய்ச்சியாளர் பெர்னாண்டஸ். இவரது மனைவி டெஸ்ஸி மற்றும் 5 வயது மகள் ஆரேலியாவுடன் வசித்து வந்த இவர்களின் குடியிருப்பிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த விக்ரம் குமார் என்பவர் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், அவரது முறையற்ற வேலை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த விக்ரம் குமார், கடந்த சனிக்கிழமை (அக் 10) இரவு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆரேலியாவை சாக்லேட் தருவதாக ஆசை காட்டி அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கொடூரமான முறையில் குழந்தையை கொலை செய்து, கை கால்களை கட்டி உடலை கல்லால் பிணைத்து திறந்தவெளி நீர் தொட்டியில் வீசியுள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து, வேறொரு காவலாளியின் தொலைபேசியிலிருந்து பெர்னாண்டஸை தொடர்பு கொண்ட விக்ரம் குமார், உங்கள் மகள் தன்னிடம் இருப்பதாகவும், ரூ. 20 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே திருப்பி அனுப்புவேன் என்றும் இந்தியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தீவிர தேடுதலுக்குப் பிறகு காவல்துறையினர் உதவியுடன் அந்த குடியிருப்பின் கீழ் தளத்திலுள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

   

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றவாளியான விக்ரம் குமாரை விரைந்து கைது செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பழிவாங்கும் நோக்கோடும் பணம் பறிக்கும் நோக்கத்தோடும் வடமாநில காவலாளியால் அரங்கேற்றப்பட்ட இந்த கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.