தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது இயக்குனர் மணிரத்தினம் தான். 80 களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் இன்று வரை தொடங்கி வருகிறது. பல்லவி அணு பல்லவியில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை இவரது படங்களின் வரலாறு அதிகம்.

Maniratnam
மௌன ராகம், ரோஜா, அலைபாயுதே, ஓகே கண்மணி என காதல் படங்கள் ஒருபக்கம் என்றால் நாயகன், தளபதி, ஆயுத எழுத்து, செக்க சிவந்த வானம் என்ற ஆக்சன் படங்கள் ஒருபக்கம். கன்னத்தில் முத்தமிட்டால், பாம்பே, கடல், ராவணன் என வித்தியாசமான படங்கள் ஒருபக்கம், இறுதியாக வரலாறு படமான பொன்னியின் செல்வனையும் இயக்கி ஆச்சர்யப்படுத்தினார். இவரின் மறக்க முடியாத 5 திரைப்படங்கள் குறித்தும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் குறித்தும் இதில் பார்க்கலாம்.
மௌன ராகம்

Still from Mounaragam
ரேவதி, கார்த்திக், மோகன் இயக்கத்தில் வெளியான படம் தான் மவுன ராகம். காதலன் இறந்துவிட பிடிக்காத வேறு திருமணத்தை செய்து கொள்ளும் பெண் எப்படி கணவனின் அன்பை புரிந்து கொள்கிறார் என்பதே கதை. சிம்பிளான ஒன்லைன் தான் ஆனால் படத்தில் கதாபாத்திரத்தை மணிரத்தினம் உருவாக்கிய விதம் தான் இன்றும் பலரின் பேவரைட்டாக உள்ளது.
‘தாலி கட்டினா’ கணவனை பெண்கள் வேண்டாம் என்று சொல்லலாம் என்பது தமிழ்த் திரைப்பட பார்வையாளர்களுக்கு இதுவே முதல் முறை. மௌன ராகம் வரை, தமிழ்த் திரைப்படங்களில் பெண் ஒரு உணர்வுப் பெண்ணாகக் காட்டப்படவில்லை. அவள் வெற்றி பெற்றவள். அதனால்தான், வெற்றியைக் குறிக்கும் வகையில், திருமணக் காட்சிகளுடன் முடிவடையும் திரைப்படங்களை வைத்திருக்கிறீர்கள். மௌன ராகம் என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல, திருமணத்தைத் தொடர்ந்து நடக்கும் திருமணம் பற்றியது.
ரோஜா

Roja poster
சத்தியவான், சாவித்திரி கதை தான் ரோஜா. மரணத்தின் வழிக்கு சென்ற கணவனை மீட்டு வந்த சாவித்திரியை போல் தான் ரோஜாவும். காஷ்மீரில் தீவிரவாத இடத்தில் சிக்கும் கணவனை அப்பாவியான மனைவி ரோஜா காப்பாற்றுவாள். இன்றும் பலருக்கு பேவரைட் ரோஜா தான். 90 களில் பெண் கதாபாத்திரத்தை வைத்து முழுமையாக ஒரு படத்தை கொடுத்திருந்தார் மணிரத்தினம்.
தளபதி

Still from Thalapathy
மகாபாரத கர்ணனை மையமாக வைத்து உருவாக்கிய படம் தான் தளபதி. சிறுவயதிலேயே குழந்தைக்கு தாயான ஸ்ரீவித்யா அதை வகர்க்க முடியாமல், ரயில் பெட்டியில் வைத்து விடுவார். அனாதையாக வளரும் சூர்யா இந்த சமுதாயத்தில் சந்திக்கும் அவமானங்கள் ஏராளம். இதை வைத்து அழகான ஒரு ஆக்சன் கதையை செய்திருந்தார் மணிரத்தினம். முற்றிலும் வேறுபட்ட ரஜினியை நாம் இந்தப்படத்தில் காணலாம். குறிப்பாக ரஜினி மம்மூட்டியின் காட்சிகள் அவர்களின் நட்பு கர்ணன் துரியோதனனை நேரில் காட்டியது போல் இருக்கும்.
ஓகே கண்மணி

Still from OK Kanmani
லிவிங் டுகெதர் அதாவது கல்யாணம் ஆகாமல் ஆன் பெண் இருவரும் சேர்ந்து வாழ்வது, நம் இந்தியர்களுக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் இன்று பல இளைஞர்கள் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால் கல்யாணத்தின் தேவையையும் உண்மையான காதலும் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என அழகாக காட்டி இருப்பார் மணிரத்தினம். கல்யாணம் மீது விருப்பம் இல்லாத ஆதியும் தாராவும் இறுதியில் வயதில் மூத்த தம்பதி கணபதி பவானியை பார்த்து மாறுவது அழகான ஒன்று.
பொன்னியின் செல்வன்

Ponniyin selvan
இறுதியாக மணிரத்தினத்தின் கனவு படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய சோழ தேசத்தை பற்றிய கதை தான் பொன்னியின் செல்வன். சோலா தேசத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் கதாபாத்திரங்களையும் வைத்து கூடவே அவரின் கற்பனையையும் கலந்து உருவாக்கி இருப்பார். நான்கு தலைமுறைக்கும் மேலாக பொன்னியின் செல்வன் ரசிகர்கள் உள்ளனர். எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை சூழ்ச்சிகள். அப்பப்ப இந்தியாவின் கேம் ஆப் த்ரோன்ஸ் தான் பொன்னியின் செல்வன். அதை அவ்வளவு நேர்த்தியாக படமாக இயக்கினார் மணிரத்தினம்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மணிரத்தினம் என்றும் சினிமாவின் ரத்தினமே.