5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்… தமிழக மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

திருச்சி திமுக மாநில மாநாட்டில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், தற்போது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் இந்த நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைச் சேர்க்க திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது கடன்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைத் தலைமையேற்று நடத்தி வரும் கனிமொழி தலைமையிலான குழு, மிக விரைவில் அறிக்கையை மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு, கட்சி மேலிடத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு, நகைக் கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே திமுக மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.